குருபரன்: தமிழ்தேசிய கட்டைப்பஞ்சாயத்து தலைவர். By நட்சத்திரன் செவ்விந்தியன்
முன்னாள் முதலமைச்சர் புதுக்கட்சி தொடங்கிய புதின விழாவில் குருபரன் குமாரவடிவேல் வழங்கிய முழு உரையையும் கிரகித்து ஆராய்ந்து இதனை எழுதுகிறேன். புலிகளின் ஈழப்போருக்குப்பின்னான காலத்தில் சந்தர்ப்பவாத தேசியவாதப்பத்திரிகைகளும் அவரும் குருபரனை வெகுகச்சிதமாக தமிழ்த்தேசியத்தின் தத்துவாசிரியராக வடிவமைத்துள்ளனர். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை என்பதுபோல அவர் போட்டியிடாமலே இப்பதவியை பெற்றுக்கொண்டார். குருபரன் புத்திசீவியா அல்லது வெறும் Technocrat தானா?
திறமையான புத்திசீவியின் அடிப்படைப்பண்புகள் தனக்காக தன் சாதிக்கான/குழுமத்திற்கான/பிரதேசத்திற்கான/ வர்க்கத்திற்கான/இனத்திற்கான நலனிற்காக சிந்திக்காது முழு சமூகத்திற்காக முமு நாட்டிற்காக சர்வதேசப்பின்புலத்தில் வைத்து சிந்திப்பது. தான் படித்த சட்டத்துறை விதிகள் சூக்குமங்களை மட்டும் அடிப்படையாக வைத்து சிந்திக்காமல் வரலாறு சமூகவியல் அரசியல் மனித உரிமைகள், சர்வதேச பூகோள அரசியல் மானுடவியல் இனவியல் போன்ற இன்னபிற கற்கைநெறிகள் சார்ந்து multifaceted- பன்மைத்துவம் சார்ந்து சிந்திப்பது. சமகால உலகின் மிக அற்புதமான சட்த்தரணி/ புத்திசீவி Geoffrey Robertson இதற்கு நல்ல உதாரணம்.
துரதிஸ்டவசமாக குரூபரன் பிறந்த 1985 இலங்கையின் வரலாற்றில் மிகச்சபிக்கப்பட்ட காலம். அவரது ஒரு வயதான 1986ல் புலிகள் ஏனைய சக விடுதலை இயக்கங்களை அழித்து தமிழ் பாசிச அரசியலை,தொடங்க 1987 ல் நன்நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இல.இந்திய ஒப்பந்தத்தை அடுத்து தென்னிலங்கையில் ஜே.வி.பி பாசிசம் அதிதீவிரம் பெறுகிறது. அவர் தீவிரமாக வாசிக்கத்தொடங்குகிற 15 வயதில் வன்னிப்போரில் புலிகள் முடிசூட்ட 2001 ல் புலிகளின் போற்கால ஒப்பந்தமான மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் இடம்பெறுகிறது.அவரின் இக்கால பதின்மவயது சாகசங்களை மனோரதியமாக அன்றி காரணகாரியரீதியாக அலசி சிந்திக்க அவரால் முடியாமல் போய்விட்டது. இதற்காகத்தான் இன்றைய மேலைத்தேய பல்கலைக்கழகத்தில் சட்டம் பயில்பவர்களை தனியை சட்டம் பயிலாமல் சட்டப்பட்டத்தோடு கூட்டாக இன்னொரு சமூகவிஞ்ஞானப் பட்டத்தையும் பயிலுமாறு அறிவுறுத்ப்படுகிறார்கள். குருபரன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வெறும் சட்டம் பயின்று வெறும் Technocrat ஆன துயரவரலாறு இதுதான்.
இவர் ஒரு gifted student ஆகவோ புத்திசீவியோ இல்லை. தகப்பன் Academic ஆன வசதியான வண்ணார்பண்ணை வெள்ளாள குடும்பப்பின்னணியின் உருவாக்கம். பாசிசபுலிகள் அவருக்கான உவப்பான ஆடுகளத்தை விட்டுச்சின்றது மிச்சம். குருபரன் திறமையானவராக புத்திசீவித்துவ இயல்புகளை கொண்டிருந்தால் 2009 க்குப்பின்னரேயும் குருபரன் புலிகளை Text book Fascist என்பதை அறிந்திருப்பார். இலங்கையின் வரலாற்றை ஒரு மதிநுட்பமிக்க புத்திசீவியாக குருபரன் படித்திருந்தால் பின்வரும் அடிப்படை உண்மைகளை அறிந்திருப்பார்
1. இல. இந்திய ஒப்பந்தம் நல்ல ஆரம்பம். இதனை குழப்பியது புலிகள்.
2. புலிகள் Text book example ஆனவர்கள் fascism க்கு.
3. 1987 க்குப்பின்னான அனைத்து ஈழப்போர்களின் சிற்பி பிரபாகரன். எனவே அனைத்து பெருமடங்கான அழிவுக்கும் பிரபாகரனே காரணம்.
4. அறியப்பட்ட பதியப்பட்ட வரலாற்றுக்காலத்தில் ஈழத்தில் அதிகமான தமிழர்களின் கொலைக்கு புலிகளே காரணம்.
5. புலிகள் வரையறுத்த தமிழீழ எல்லைகள் நவீன சுயநிர்ணய உரிமைக்கோட்பாட்டின்படி கேள்விக்குரியவகையில் சிக்கலானது. அன்று பிரித்தானியர் தம் நிர்வாக வசதிகளுக்கமைய வரையறுத்ததே வடகிழக்கு மாகாண எல்லைகள். இதனை அப்படியே,கொப்பியடித்து உருவாக்கியதே புலிகளின் தமிழீழ எல்லை. இது தவறானது. கிழக்கு மாகாணத்தில் தமிழர் இருந்தாலும் அது கண்டிய ராச்சியத்திற்குட்பட்டிருந்ததேதவிர சங்கிலிய மன்னனின் ராச்சியத்திற்குள் அல்ல. மறுதலையாக புத்தளம் முதலிய பிரதேசங்கள் சங்கிலிய மன்னனின் ஆட்சிக்குள்ளிருந்தன.( Narrating Tamil Nationalism by Michael Roberts)
இவற்றை அறியாது உணராது குருபரன் வழங்கிய உரையை கவனியுங்கள். அவர் ஒரு stylist. அவருக்கு கிட்டப்பார்வையா தூரப்பார்வையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர் அடிக்கடி கண்ணாடியை கழற்றியும் அணிந்தும் படங்காட்டுகிறார். Reactionary event, policy of containment, dichotomy போன்ற ஆங்கில பதங்களை உதிர்க்கிறார். தாரகி சிவராமுக்கும் Tamilnet க்கும் அப்பால் அவர் வாசிப்பு இல்லை.
குருபரன் புலிப்பாசிசத்தை "தமிழ்த்தேசியம்" "மாற்று அரசியல்" என்கிற brand களில் Recycling தான் செய்கிறார். "மாமனிதர்" ஆயுதங்கள் மௌனித்தபின்" என்கிற புலிகளின் மந்திரங்களை உச்சாடனம் செய்கிறார். புலிகள் ஆயுதமுனையில் நூற்றுக்கணக்கான தமிழரசுக்கட்சி உறுப்பினர் தலைவரை கொன்றபின் சூழ்ச்சி மிரட்டலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வரலாற்றை திரித்து அதற்கு சிவராமின் தத்துவார்த்த விளக்கத்தை மீள ஒப்புவிக்கிறார். குருபரன் இப்போது புத்திசீவித்துவ பாலைவனமான யாழ்ப்பாணத்தில் தனிக்காட்டு ராஜா. செல்வாவுக்கு பின்வந்த அமிர்தலிங்கம் உருவாக்கிய யுகத்தில் கத்தோலிக்கர் அல்லாத யாழின் அங்கிலிக்கன்/மெதடிஸ்த கிறிஸ்தவ புத்திசீவிகளான அரசரட்ணம், SJ தம்பையா, எலியேசர், AJ வில்சன், தனிநாயகம் அடிகள்(இவர் விதிவிலக்காக கத்தோலிக்கர்) தமது தகுதிக்கேற்ப பதவிகள் கிடைக்காததால் வெளிநாடுகளுக்கு ஓடினார்கள். ( இதில் வில்சனும் எலியேசரும் புலிகளின் வசியத்திற்காட்பட்டு புலி லாபியிஸ்ஸ்ட் ஆனது இன்னொரு இடைக்கதை)
குருபரனோடு இப்போது அனல்வாதம் புனல்வாதம் புரிய யாழில் ஆட்களில்லை. கதிர்காமர், நீலன் திருச்செல்வம், ராஜினி திராணகம, கேதீஸ் லோகநாதன் முதலியோரை மண்டையில்போட்டு குருபரனின் வர்த்தக ஏகபோகத்தை புலிகள் உறுதிப்படுத்திச்சென்றிருக்கிறார்கள். ருத்ரமூர்த்தி சேரன் பிற்காலத்தில் தனக்கு நோபல் பரிசுபெற உதவியாயிருக்கும் என்று கட்டின யூதப்பெண்மணியும் குருபரனின் உள்ளூர் NGO கூட்டத்தில் கட்டுரை படிக்குமளவுக்கு சேரனின் புலிகளிடம் சோரம்போன வரலாறு இருக்கிறது.
0 comments :
Post a Comment