Tuesday, May 5, 2020

கொழும்பைச் சேர்ந்த பெண்மணியின் இறப்பினால் பெரும்பரபரப்பு!

கொழும்பு - மோதரையைச் சேர்ந்த பெண்மணியொருவர் இன்று கொரோனா தொற்றுக் காரணமாக பலியாகியுள்ளார். அதனால் கொழும்பில் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பெண்மணி கடும் நோய்வாய்ப்பட்டு நேற்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் அந்தப் பெண்ணிடம் காணப்பட்டதால் அவர் காய்ச்சலுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பல மணி நேரத்தின் பின்னர் இறந்துள்ளார்.

குறித்த பெண்மணி பல மாதங்கள் நோய்வாய்ப்பட்டு வீட்டோடு இருந்துள்ளார். அக்காலப் பகுதியில் பக்கத்து வீட்டார்கள், அயலவர்கள், வியாபாரிகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினருடனும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளார். அதனால் அவர் கொரோனா தொற்றுக்குள்ளானவர் என்பதைக் கண்டுபிடிக்க இயலாது போயுள்ளது.

மரணமடைந்துள்ள பெண்மணியின் கணவன் ஒரு வெதுப்பகத் தொழிலாளியாவார். அவர் அந்தப் பெண்மணிக்கு சென்ற மாதம் சகல விதத்திலும் பணிவிடை செய்துள்ளார். அவர் வாழ்ந்த பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கானோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர் வாழ்ந்து வந்த தாெடர் வீடுகளில் வாழ்ந்த 3000 இற்கும் மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் எனத் தெரியவருகின்றது. ...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com