Tuesday, May 19, 2020

சீரற்ற வானிலையால் பலர் பாதிப்பு

மன்னாரில் காற்றுடன் கூடிய மழை 75 குடும்பங்கள் பாதிப்பு மன்னார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த காற்றுடன் கூடிய கன மழை காரணமாக வீடுகள் மற்ம் வர்த்தக நிலையங்கள் சில சேதம் அடைந்துள்ளன.

அத்தோடு தோட்ட செய்கைகளும் நேதமடைந்துள்ளன. மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. நள்ளிரவு 12 மணி தொடக்கம் கடும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததை அடுத்து மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவுகளிலும் 75 குடும்பங்களை சேர்ந்த 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் நகர் பிரதேச செயலக பிரிவில் 28 குடும்பங்களை சேர்ந்த 91 நபர்களும் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 18 குடும்பங்களை சேர்ந்த 60 நபர்களும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 13 குடும்பங்களை சேர்ந்த 43 நபர்களும் முசலி முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 8 குடும்பங்களை சேர்ந்த 25 நபர்களும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 6 குடும்பங்களை சேர்ந்த 25 நபர்களும் பாதிக்கப்படுள்ளனர் .

குறிப்பாக ஜீவபுரம் சாந்திபுரம் ஜிம்றோன் நகர் இவஞ்சியன் குளம் இதரவான்கோட்டை வெள்ளாங்குளம் சிறுநாவற்குளம் உற்பட அதிகளவான கிராமங்களில் வீடுகள் பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் சேதம் அடைந்துள்ளன.
முன்னால் வீடமைப்பு நிர்மாண துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவால் வீட்டு திட்டம் வழங்கப்பட்டு முதலாம் இரண்டாம் கட்ட மிகுதி பணம் வழங்கப்படாமல் பழையா வீடும் இன்றி புதிய வீடும் கட்டி முடிக்கப்படாத நிலையில் தற்காலிக கொட்டில்களில் வசித்து வந்த அதிகமான மக்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பாதிக்கப்பட்ட வீடுக சொத்துக்கள் தொடர்பில் கிராம சேவகர் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் விபரங்களை சேகரித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.
இதேவேளை வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக 11 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்ததன் காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருதங்குளம் ஒமந்தை வேலன்குளம்தேக்கவத்தை மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அவுரம்துலாவ அவுசதப்பிட்டிய ஆகிய பகுதிகளில் வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் ஈரப்பெரியகுளம் பகுதியில் வீதியின் குறுக்காக மரம் ஒன்று விழுந்த நிலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
அதன்பாதுகாப்பு தரப்பினர் அங்கிருந்து அகற்றியிருந்தனர்.காற்றுடன் கூடிய மழை காரணமாக பாதிப்படைந்த வீடுகளை பார்வையிட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் அவ்வீடுகளில் வசித்த சில குடும்பங்களுக்கு தற்காலிகமாக தரப்பால் வழங்கியதுடன் வீட்டின் பாதிப்பு தொடர்பில் மதிப்பீடு செய்திருந்தனர்.

அவர்களுக்கான இழப்பீடாக முதல் கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com