Wednesday, May 6, 2020

உலகில் எந்தளவு பலம்மிக்கவரும் இன்று நிலைகுலைந்துள்ளனர்! - பிரதமர்

கொவிட் -19 வைரஸ் புத்தரின் போதனைகளைப் புரிந்துகொள்ள பெரிதும் உதவுகிறது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

இன்று காலை அலரி மாளிகையில் நடைபெற்ற வெசாக் தின நினைவேந்தலில் பிரதமர் இந்தக் கருத்தினைக் குறிப்பிட்டார். மகா சங்கத்தினர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆதரவின் கீழ் அரச வெசக் விழா இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

வெசாக் நாள் திருவிழாவோடு இணைந்து நான்கு புதிய முத்திரைகள் மற்றும் இரண்டு முதல் நாள் காகித உரைகள் வெளியிட்டு வைக்கப்பட்டன. முதல் முத்திரை மால்வத்து பீடத்தின் நியங்கொட விஜிதசிறி தேரருக்கு வழங்கிவைக்கப்பட்டது.

அதனையடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முத்திரைகள் மற்றும் முதல் நாள் அட்டைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஆண்டு வெசக்கைக் கொண்டாட முடியாமற்போன பெளத்தர்கள் இந்த ஆண்டு வெசக்கைக் கொண்டாட ஆர்வமாக உள்ளனர் என்பதை அறிந்திருப்பதாகக் கூறினார்.

உலகில் எவ்வளவு சக்திவாய்ந்தவர்களாக இருந்தாலும், இன்று கொவிட் - 19 காரணமாக பலமிழந்து காணப்படுகின்றார்கள். உலகத்தை மாற்றியமைக்க முயன்றவர்கள் இன்று அசாதாரண சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com