கொரோனா வாழ்வாதார கொடுப்பனவு வவுணதீவில்
வவுணதீவில் 10 ஆயிரத்தி 206 குடும்பங்களுக்கு இரண்டாம் கட்ட கொரோனா வாழ்வாதார கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் இரண்டாம் கட்ட ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் தலைமையில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்பணியில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கலைச்செல்வி வாமதேவன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு இரண்டாம் கட்ட ஐந்தாயிரம் ரூபாகொடுப்பனவு வழங்கும் மேற்பார்வை கடமையில் ஈடுபட்டனர்.
இதன்படி இப்பிரிவில் சமுர்த்தி நிவாரணம் பெறும் 7640 குடும்பங்களுக்கும், காத்திருப்போர் பட்டியலிலுள்ள 2250 குடும்பங்களுக்கும், தொழில் பாதிக்கப்பட்ட 268 குடும்பங்களுக்கும், மேல்முறையீடு செய்த 48 குடும்பங்களுக்குமாக இப்பிரிவில் சுமார் ஐந்து கோடியே பத்து இலட்சம் ரூபா 10 ஆயிரத்தி 206 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
0 comments :
Post a Comment