Thursday, May 28, 2020

அரிசியின் விலையை பழைய நிலையிலேயே வைத்திருக்க அதிகாரிகள் முயல்கின்றனர்! - வசந்த பண்டார

அரிசி தொடர்பில் விலைக் கட்டுப்பாடு தொடர்பான பிரச்சினையை ஜனாதிபதி தீர்த்துக் கொண்ட பின்னர், சில அதிகாரிகள் சிவப்பரிசிக்கான பழைய விலையை வைத்திருக்க முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து தேசப்பற்றுள்ள தேசிய தேசிய இயக்கத்தின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

டாக்டர் வஸந்த பண்டார இவ்வாறு சொல்கிறார்.

“ஏப்ரல் 20 ம் தேதி அரிசி விலை வர்த்தமானியைக்கையாண்ட அதிகாரிகளை நாங்கள் இரண்டு பிரிவினராகக் பார்க்க முடியும் என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கூறியுள்ளோம். அவர்களுக்கு 8 ஆம் வகுப்பு எண்கணிதம் தெரியாது, அரிசிக்கு பதிலாக, மூன்று வேளையும் பாண் சாப்பிடுபவர்கள் அவர்கள். இல்லையெனில், ஜனாதிபதிஆணைக்கு எதிராக சதித்திட்டம் தீட்டும் ஒரு குழு இருக்க வேண்டும்.

இப்போது, அரிசி விலை குறித்த தனது எண்ணத்தை ஜனாதிபதி மாற்றியுள்ளார். அவர்கள் மீண்டும் செய்ய முனைவது என்னவென்றால், விவசாயிகளையும் நெல் உற்பத்தியாளரையும் அதள பாதாளத்திற்குச் தள்ளவே இவர்கள் முயற்சிக்கின்றார்கள். நாட்டின் உணவு உற்பத்தியை கீழ்மட்டத்திற்குக் கொண்டு செல்லவே விரும்புகின்றார்கள். அது ஜனாதிபதியின் விருப்பம் அல்ல. ”

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com