ஒரு புறம் தேசியம் மறுபுறம் சொத்துக் குவிப்பு - சிறீதரனின் இரட்டை முகம் அம்பலம்
தனது சுயலாப அரசியலுக்காக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரையும், புலி உறுப்பினர்களையும் வைத்து தனது வாக்கு வங்கிக்காக அரசியல் நடத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஒரு புறம் தேசியம் பேசி மக்களை ஏமாற்றி வரும் அதேவேளை மறுபுறம் சொத்துக்களை சேர்க்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல ஏக்கர் வயல்காணிகள், மேட்டுக்காணிகளை வேண்டியுள்ளதுடன், கரடிப்போக்குச் சந்தியில், மதுபான நிலைய அனுமதிப்பத்திரத்துடன் திரையரங்க காணியினை வாங்கியுள்ளார்.
தமிழ் மக்கள் மத்தியில் தனக்கு எந்தவித சொத்துக்களும் இல்லை என தன்னைக் காட்டிக்கொள்ளும் சிறீதரன் மறுபுறத்தில் மிகவேகமாக சொத்துக்களை சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment