விக்கியின் சம்பந்திக்கு அரளை பெயர்ந்தது. புலிகள் ஜனநாயகத்தை காப்பாற்றினார்களாம்!
மஹிந்த ராஜபக்ஷவின் சகபாடியும் விக்கியின் சம்பந்தியுமான வாசுதேவ நாணயக்கார புலிகள் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ளாது ஜனநாயகத்தை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார்.
இக்கருத்தானது வாசுதேவ அரளை பெயர்ந்து அவஸ்தப்படுகின்றார் என்பதை எடுத்துரைக்கின்றது. இலங்கையில் ரணில்-பிரபா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு தேனிலவு கொண்டாடிய சந்தர்பத்திலேயே சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது என்பதனை வாசுதேவ நாணயக்கார மறந்துவிட்டார். அந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி இலங்கைமுழுவதும் போர் நிறுத்தக்கண்காணிப்புக்குழு இருந்திருக்காவிட்டால் புலிகள் வெள்ளத்தில் நீந்திச் சென்று இராணுவத்தினரை தாக்கியிருப்பர்.
புலிகள் எப்போம் பொருத்தமற்ற நேரங்களில் கோழைத்தனமாக தாக்குதல் நடத்துவதை வியூகமாக கொண்டிருந்தவர்கள் என்பதனை இலங்கைநெட் வாசுவுக்கு நினைவு படுத்துகின்றது.
0 comments :
Post a Comment