Friday, May 8, 2020

அமெரிக்கக் குடியுரிமையிலிருந்து ஜனாதிபதி கோத்தாவின் பெயர் நீக்கம்... பெயர்ப்பட்டியல் உள்ளடக்கம்!

அமெரிக்கக் குடியுரிமையிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டோரின் பெயர்ப்பட்டியலில் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கப்பட்டோரின் பெயர்ப்பட்டியலை அமெரிக்கக் குடியரசு இன்று வெளியிட்டுள்ளது. தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிடுகின்றார் என்றவுடன்தான் அவரின் அமெரிக்கக் குடியுரிமை தொடர்பில் பேச்சுக்கள் மேலெழத் தொடங்கின. கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே.

அதற்கு முன்னர் மார்ச் மாதத்தில் தான் அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக் கொள்வதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயத்திற்குத் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் சிவில் அமைப்புக்கள் பல கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பல விமர்சனங்களை முன்வைத்தன. அவை மேன்முறையீட்டு நீதிமன்றம் வரை சென்றன.

என்றாலும் சென்ற வருடம் ஒக்டோபர் மாதம் கோத்தாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பிலான முறையீட்டை நிராகரித்து, அவர் தேர்தலில் போட்டியிடலாம் எனத் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.

கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் பெயர் அமெரிக்கக் குடியுரிமையிலிருந்து நீக்கப்பட்டதற்கான ஆதாரத்தைக் காணொளியில் காணலாம்.
https://youtu.be/hoVN-dZMyYI

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com