வாகன தண்டப்பணத்தை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால எல்லை மேலும் நீடிப்பு
வாகன தண்டப்பணத்தை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால எல்லையை மேலும் நீடிக்க அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி நாளை 11ஆம் திகதி முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரையான காலம் வரை தண்டப் பணத்தை செலுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமையினால் மேலதிக கட்டணங்கள் எதுவும் இன்றி வாகன தண்டப்பணத்தை அறவிடுவதற்கு கால எல்லையொன்று ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது.
பொலிஸ் மா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் அனுமதியுடன் கடந்த 2ஆம் திகதி வரை கால எல்லை வழங்கப்பட்டது.
மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களுக்கே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த 29ஆம் திகதி முதல் கடந்த 4ஆம் திகதி வரை மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டமையினால் நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளில் செயற்பாடுகளும் தடைப்பட்டிருந்தன.
இதனால் தண்டப்பணத்தை செலுத்துவதற்கான சந்தர்ப்பம் உரிய தரப்பினருக்கு கிடைக்கவில்லை என தபால் திணைக்களம் கூறுகின்றது.
இந்த விடயங்களை கருத்திற் கொண்டே மேலதிக காலத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment