மோதர பெண்ணுடன் உறவினைப் பேணியோர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு...!
கொழும்பு 15, மோதர, மெத்சந்த வீட்டுத் தொடரைச் சேர்ந்த, கோவிட் 19 நோய்த்தொற்றால் இறந்த பெண்ணுடன் தொடர்புடைய 60 பேர் இன்று (06) பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், இறந்த பெண் வைரஸால் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பது இன்னும் தெரியவில்லை. வைரஸ் தொற்றுடையவர்கள் என இனங்காணப்பட்ட 16 பேர் நேற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறினர் என்று தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது, 547 நோயாளிகள் மருத்துவ மேற்பார்வையில்மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இராணுவத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, அந்தப் பெண்ணுடன் தொடர்பினை ஏற்படுத்தியோர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், குறித்த பெண் கொவிட் - 19 தொற்றுநோயால் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பதில் பிரச்சினைகள் இருப்பதாக கூறினார். இன்று நாங்கள் அவர்களைப் பரிசோதனைக்குட்படுத்துவோம். முடியாது போனால் எல்லோரையும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவோம் எனவும் கூறினார். என்றாலும் இன்றைய தினம் குறித்த பெண்மணிக்கு எவ்வாறு கொவிட் - 19 தொற்றியது என்பதை நாங்கள் கண்டுபிடிப்போம் என்றும் அவர் உறுதிப்படக் கூறினார்.

0 comments :
Post a Comment