Thursday, May 28, 2020

கொரோனா தொடர்பில் இலங்கை வெற்றிபெற்றே உள்ளது! - ரோஸி

கொரோனா வைரஸிலிருந்து வெற்றி பெறுவதற்குக் காரணம் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடே என கொழும்பு நகராதிபதி ரோஸி சேனநாயக்க கூறுகிறார்.

நல்ல விடயங்களை நல்ல விடயங்கள் என்று சொல்லவும் கெட்ட விடயங்களை கெட்ட விடயங்கள் என்று சொல்லவும் நான் ஒருபோதும் தயங்குவதில்லை என்றும் அவர் கூறினார்.

மே மாதம் முதலாம் திகதி முதல், கொழும்பு நகரசபைப் பகுதியில் இருந்து எந்தவொரு கொரோனா தொற்றாளரும் பதிவாகவில்லை என்றும், எல்லாம் இன்னும் சரியாக இல்லாததால் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே நகருக்குள் நுழையுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

அவர் கொழும்பு நகரசபையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு உரையாற்றினார்.

அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்து அரசாங்கத்திற்குச் சோரம் போகின்றீர்களா? என ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்டபோது, ஒரு பெண்ணாகத் தனக்கு முதுகெலும்பாக இருப்பதாகவும், பிரிவினைவாத அரசியலுக்கு அல்லாமல் பழமைவாத அரசியலுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் கெட்டதைச் சொல்லவும் நல்ல விஷயங்களைச் சொல்லவும் ஒருபோதும் தான் பின்நிற்கப் போவதில்லை என்று மீண்டும் மீண்டும் மடக்கி மடக்கி அவர் சொன்னார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com