Friday, May 29, 2020

தேர்தலைப் பிற்போடுவதற்கான காரணத்தை திங்கள் வெளியிடுவோம் என்கிறது தேர்தல் ஆணைக்குழு!

தேர்தலை குறித்த முறையில் நடாத்துவதற்கு இயலாமை மற்றும் அதில் ஆதிக்கம் செலுத்துகின்ற காரணிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 01 ஆம் திகதி திங்கட்கிழமை மிகத் தெளிவான முறையில் உச்ச நீதிமன்றத்தில் கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இன்று (29) நீதிமன்றில் நீதிபதிகள் ஐவரைக் கொண்டோர் முன்னிலையில் தெரிவித்தார்.

தேர்தலுக்காக சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் தற்போது வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன எனவும், அந்த வழிகாட்டல்களின் கீழ் தேர்தலை நடாத்துவதற்கு காலக்கெடு அவசியம் எனவும் தான் தேர்தல் ஆணைக்குழு சார்பில் கருத்துக்களை முன்வைக்க முனைவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடாத்துவது மற்றும் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைத்து வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிக்கையை இரத்துச் செய்யுமாறு குறிப்பிட்டுள்ள மனுவை இன்றும் நீதிமன்று கருத்திற்கொண்டு, தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரிய, புவனெக்க அலுவிகாரே, சிசிர த ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்தன, விஜித் மலல்கொட முதலியோரே இன்று நீதிமன்ற நீதிபதிகளாகக் கடமையாற்றினர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com