சுமந்திரனுக்காக தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீனத்தை தொலைக்க முற்படும் ரட்ணஜீவன் கூல்..
இலங்கையில் செயற்படுகின்ற சுயாதீன ஆணைக்குழுக்களில் தேர்தல்கள் ஆணைக்குழு அதன் சுயாதீனத்தை இதுவரை இழக்கவில்லை என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகின்றது. ஆனால் அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் நிகழ்சி நிரலின் கீழ் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் பரவலாக அதிகரித்து வருகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்காக சுமந்திரனால் முன்மொழியப்பட்டவர் ரட்ணஜீவன் கூல். அதற்கு பிரதியுபகாரமாக அவர் எதிர்வரும் தேர்தலில் சுமந்திரனின் வெற்றியை உறுதிபண்ண நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறியமுடிகின்றது.
இதன்பிரகாரம் யாழ் தேர்வத்தாட்சி அலுவலராக தமக்கு வேண்டிய ஒருவரை நியமிப்பதற்கு கூல் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்வத்தாட்சி அலுவலராக மாவட்ட செயலர்கள் நியமிக்கப்படுவது வழமையாகும். ஆனால் தற்போதைய தேர்வத்தாட்சி அலுவலர் நிவாரணங்கள் வழங்கும்போது , கட்சியொன்றுக்கு ஆதரவு வழங்கினார் என்ற குற்றத்தை சுமத்தி தமது தேவைக்கேற்றவாறு செயற்படக்கூடிய ஒருவரை நியமிக்க திட்டமிட்டுவருவதாக அறியமுடிகின்றது.
0 comments :
Post a Comment