Wednesday, May 27, 2020

மரணமடைகின்ற முஸ்லிம்களின் சரீரங்களைப் புதைப்பது தொடர்பிலான மனு பிற்போடப்பட்டுள்ளது!

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் சுகாதார அதிகாரிகளின் முடிவு அரசியலமைப்பை மீறுகின்றது என உச்ச நீதிமன்றம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலிப்பதற்கு உச்ச நீதிமன்றம் திகதியொன்றை முடிவு செய்துள்ளது.

முர்து பிரனாந்து, எஸ். துரைராஜா, யஸந்த கோதாகொட உள்ளிட்ட நீதிபதிகள் நீதிபதிக் குழு முன்னிலையிலேயே இந்த மனு பற்றி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த மனுவை ஜூலை 22 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷார்ட் பதுர்தீன், அமீர் அலி, ஹுஸைன் மற்றும் மொஹமட் மஹ்ரூப் ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com