ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தில் ஹெரோயின் கொண்டுசென்ற ஒருவர் கைது
ஊரடங்கு சட்டத்தின்போது பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மதுரங்குளி - கரிக்கட்டை 16 ஆம் மைல்கல் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பாலாவி விமானப்படை புலனாய்வுப் பிரிவினரும் முந்தல் பொலிஸாரும் இணைந்து நேற்று முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் வேளையில், நுரைச்சோலையிலிருந்து கொழும்பு - தம்புள்ளைக்கு மரக்கறிகளைக் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்ட சந்தேகநபர் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் வாகனத்தின் மறைத்துவைத்திருந்த 47 கிராம் ஐஸ் போதைப்பொருளும் 12 கிராம் ஹெரோயினுடன் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் மேலதிக நடவடிக்கைக்காக முந்தல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்றையதினம் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment