கிளிநொச்சியில் இரண்டாம் கட்ட சமுர்த்திக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் குறைந்த வருமானம் பெறுவோர் தொழில் இழந்தவர்கள் மற்றும் மேன் முறையீடு செய்தவர்களுக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் வழங்கும் பணி நேற்று ஆரம்பமானது.
2020 ஆண்டு மே மாதத்தில் சமுர்த்தி நலனுதவிக் கொடுப்பனவைப் பெறுபவர்களில் தகுதியான 24 ஆயிரத்து 40 குடும்பங்களுக்கான கொடுப்பனவும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் குறைந்த வருமானம் பெறுவோர் தொழில் இழந்தவர்கள் மற்றும் மேன் முறையீடு செய்தவர்கள் என்ற அடிப்படையில் 10 ஆயிரத்து 564 பயனாளிகளுமாக 34 ஆயிரத்து 604 பயனாளிகளுக்கு இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கொடுப்பனவு நடவடிக்கை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தொடரும் என கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment