Saturday, May 9, 2020

திங்கள் முதல் பல்கலைக்கழகங்கள் ஆரம்பம்! பாடசாலைகள் தொடர்பில் ?

நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களையும், கல்விசாரா ஊழியர்களில் தேர்ந்தெடுத்துள்ள ஒரு குழுவினரையும் ஆரம்பத்தில் பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பதற்கு ஆவன செய்துள்ளதாக பல்கலைக்கழங்கள் மானிய ஆணைக்குழு குறிப்பிடுகின்றது. திங்கட்கிழமை முதல் பல்கலைக்கழகங்களின் அலுவலகப் பணிகள் மற்றும் சோதனை முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் குறித்த ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.

எவ்வாறாயினும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு வரவேண்டிய நாள் பற்றி பின்னர் அறிவிக்கப்படவுள்ளது எனவும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். அத்துடன் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட் கிழமை அரச பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கேற்பவே பாடசாலைகள் திறக்கப்படும் எனவும், அது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com