Saturday, May 30, 2020

ரணிலை பதவியிலிருந்து இறக்க தயாராகின்றது நம்பிக்கையில்லாப் பிரேரணை!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவது தொடர்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு 'சமகி ஜன பலவேகய' அமைப்பு தீர்மானித்துள்ளது.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற 'சமகி ஜன பலவேகய' வின் கூட்டமொன்றின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்துவரும் செயற்குழுக் கூட்டத்தின்போது முன்வைக்கப்படவுள்ளது.

கட்சியின் செயற்குழு எடுக்கவுள்ள தீர்மானத்திற்கு ஏற்ப நடவாமை, பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பின்பேரில் 'ஜன பலவேகயவை உருவாக்குவதற்கு எதிராகச் செயற்படுதல், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஏமாற்றுதல், தற்போதைய அரசாங்கத்துடன் சேர்ந்து இரகசியமான முறையில் செயற்படுதல், கட்சி சார்புடையோரை ஏமாற்றுதல் போன்ற விடயங்களுக்காகவே நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குள் உள்ளடக்கப்படவுள்ளதாக 'சமகி ஜன பலவேகய'வின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர் தற்போது 'சமகி ஜன பலவேக'யில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com