ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசத்திற்கு மட்டுமே தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் நடைமுறையில்
பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக வீடுகளிலிருந்து வெளியே செல்வதற்காக வழங்கப்படும் அனுமதி ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசத்தில் மாத்திரமே ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊரடங்கு சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்படும சந்தர்ப்பங்களில் வீடுகளிலிருந்து வெளியே செல்வதற்கு இது எந்த வகையிலும் பொருத்தமாகாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏதேனும் பிரதேசமொன்று அல்லது கிராமமொன்று அல்லது ஆபத்து வலயமாக அறிவிக்கப்பட்டிருக்குமாயின் அவ்வாறான வலயங்களுக்குள் பிரவேசிப்பதற்கோ அல்லது அதிலிருந்து வெளியேறுவதற்கோ எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment