இரண்டு மாதங்களாக உள்ள ஊரடங்கின் அழுத்தத்தினாலேயே மாளிகாவத்தையில் சம்பவம்! - முஜீபுர் ரஹ்மான்
இரண்டு மாதங்களாக ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் காரணங்களினால் ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாகவே இன்று மூவர் மாளிகாவத்தையில் இறந்துள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
மாளிகாவத்தையில் குறித்த நிகழ்வு இடம்பெற்ற இடத்திற்குச் சென்று கருத்துரைக்கும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். குறித்த இடத்தில் வருடந்தோறும் குறித்த நபரினால் நன்கொடைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊரடங்கும் மற்றும் தனிமைப்படுத்தல் விடயங்களில் கவனம் செலுத்தி, பொலிஸாருடனும் ஒன்றிணைந்து இந்த விடயத்தை குறித்த கொடைவள்ளல் செய்திருந்தால் சிறந்ததாக இருந்திருக்கும் என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார். குறித்த இடத்தில் நன்கொடை வழங்கும்போது ஏற்பட்ட நெரிசலில் பெண்கள் மூவர் இறந்துள்ளதுடன் மற்றும் பலர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments :
Post a Comment