Saturday, May 23, 2020

நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் தான் உயரிய பங்களிப்பை வழங்குவேன்! ஜனாதிபதி

தேசிய பாதுகாப்புத் தொடர்பில் தனது பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவேன். அதற்கு மிகவும் பொருத்தமான ஆளணியினரைத் தான் நியமித்துள்ளதாகவும், புலனாய்வுப் பிரிவை பலம்மிக்கதாக மாற்றி அவர்களுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பெளத்த ஆலோசனைக்குழு ஒன்றுகூடிய வேளையிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் தொடர்பில் விசாரணைகள் நடாத்துவதற்கு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இச்சந்தர்ப்பத்தின்போது, கொரோனாவை ஒழிப்பதற்காக ஜனாதிபதி மேற்கொண்டுள்ள அளப்பரிய சேவைகள் குறித்து மகா சங்கத்தினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com