Monday, May 4, 2020

நேற்றுக் கைதுசெய்யப்பட்ட ஸஹ்ரானின் அடியாள் வெளியிடும் கருத்துக்கள்....!

சென்ற வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. முந்தலம் பிரதேசத்தில் பயங்கரவாதிகள் என கூறப்படுவோரால் நடாத்திச் செல்லப்பட்ட ஆயுதப் பயிற்சி முகாமையும் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சூட்சுமமாகக் கண்டுபிடித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் முக்கிய சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம், அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் இளைஞர்கள் சிலருக்கு அடிப்படைவாதக் கருத்துக்களைப் போதித்தல் மற்றும் ஆயுதப் பயிற்சிகளை வழங்குவதற்கு அநுசரணை வழங்கிய நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார் என இலங்கைநெற் நேற்று செய்தி வெளியிட்டிருந்ததை வாசகர்கள் அறிவர். குறித்த நபர் கற்பிட்டி 4ஆவது குறுக்குத் தெருவை வசிப்பிடமாகக் கொண்டவர். நேற்றிரவு குறித்த சந்தேகநபரை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் முந்தலம் பிரதேசத்தில் நடாத்திச் செல்லப்பட்ட குறித்த அமைப்பின் கட்டடத் தொகுதி அமைந்துள்ள இடத்திற்கு இரகசியமாக அழைத்துச் சென்றனர்.

குறித்த இடத்தை ஆராய்ந்தபோது முக்கியமான ஆவணங்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு அரசாங்கத்தின் முக்கிய அரசியல் புள்ளி ஒருவர் பண உதவி செய்திருந்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறித்த பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பினை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சந்தேக நபர் தொடர்பான விடயங்களை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆவன செய்து வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com