மக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுமீது நம்பிக்கை இழந்துவிட்டார்களாம்.. கூறுகின்றார் சேமசிங்க
கடந்த 4 வருடங்களுடன் ஒப்பிடும் போது தேர்தல்கள் ஆணைக்குழு மீதுள்ள மக்கள் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக பொதுஜன முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
அந்த கட்சியின் அநுராதபுரம் மாவட்ட வேட்பாளர் செஹான் சேமசிங்க கொழும்பில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்…
‘தற்போதைய சூழலில் மக்கள் வாக்களிக்க தயாராகவுள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. காரணம் என்னவென்றால் அந்த ஆணைக்குழு தேர்தல் பேச்சு ஆரம்பித்ததிலிருந்தே UNP உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுக்கு சார்பாகவே செயற்பட்டு வருகின்றது.
அதனை பொய் என்று நிரூபிக்க தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படவில்லை. மேலும் மாகாண சபை தேர்தலை நடத்தாமை, உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை ஏற்ற நேரத்தில் நடத்தாமை அத்துடன் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் ஆட்சியில் இருந்த அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட்டமை என்பவற்றை குறிப்பிடலாம்.
நாட்டில் சுயாதீன நீதிமன்றம் ஒன்று காணப்படுவதால் தற்போது உயர் நீதிமன்றம் தொடர்பில் எமக்கு பூரண நம்பிக்கையுள்ளது. கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தி ஜனாதிபதி அவரின் பொறுப்பை நிறைவேற்றியுள்ளார். தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு அதன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.
நாட்டுக்கு எதிரான சக்திகளுக்கு சார்பாக செயற்பட வேண்டாம் என ஆணைக்குழுவை ஏற்றுக்கொள்கின்றேன்.’ என்றார்.
0 comments :
Post a Comment