ஆறுமுகம் தொண்டமானின் பதவி மகிந்தவுக்கு.... ஜீவன் தொண்டமான்?
காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் பதவி வகித்த அமைச்சுப் பதவியை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
எதிர்வரும் திங்கட் கிழமையன்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாவும் தெரியவருகின்றது. தொண்டமான் அவர்கள் பதவிவகித்த, சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சுப் பதவியே இவ்வாறு மகிந்த ராஜபக்ஷ வசம் செல்லவுள்ளது.
ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் இறப்பின் பின்னர் நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளராக, ஆ. தொண்டமான் அவர்களின் புதல்வரான ஜீவன் தொண்டமான் அவர்களை நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment