Thursday, May 7, 2020

கடற்படை தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்தி - சட்ட நடவடிக்கை

கடற்படை தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடற்படை கொவிட் 19 தடுக்கும் செயற்பாடுகளிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொண்டிருப்பதாக சமூக ஊடகங்கள் மூலமும் செய்தி இணையதளங்கள் சில வற்றிலும் உண்மைக்குப புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கொவிட் 19 தொற்று பரவுவதை தடுக்கும் வேலைத்திட்டத்தின் தேசிய பொறிமுறைக்குள் கடற்படையினால் மேற்கொள்ளப்படும் எந்தவித பணிகளிலிருந்தும் கடற்படை விலகிக் கொள்ளவில்லை என்றும், அனைத்து நடவடிக்கைகளிலும் கடற்படை ஆகக்கூடிய பங்களிப்பை வழங்கி செயல்படுவதை இதன் மூலம் வலியுறுத்துகின்றோம்.

இதேபோன்று இவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதை மேலும் தெரிவித்துக்கொள்வதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com