Saturday, May 9, 2020

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் கிருமிகளை அழிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிருமிகளை அழிக்கும் வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் இன்று காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

பொது மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளான டிப்போ சந்தி முதல் கரடிபோக்கு சந்தி வரையான ஏ 9 வீதியிலும், வங்கிகள் பேரூந்து நிலையம் மற்றும் தரிப்பிடங்கள் வர்த்தக நிலையங்கள் நடை பாதைகள் மக்கள் கூடும் பகுதிகளிலும் தொற்று நீக்கும் செயற்திட்டம் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெயந்த குணரட்ணவின் ஆலோசனைக்கமைவாக கிளிநொச்சி 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டி சில்வாவின் வழி நடத்தலில் காலாற்படையினரால் குறித்த தொற்று நீக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சி பொது சுகாதார பிரிவினரின் கண்காணிப்பில் தொற்று நீக்கம் கலவைகள் விசிறப்பட்டதுடன் சுகாதார அதிகாரிகளும் பொலிசாரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com