பத்து மாவட்டங்களுக்கான மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள பத்து மாவட்டங்களுக்கான மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்று வீசி கடும்காற்றின் காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தில் சுமார் 35 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மாத்தறை, கொழும்பு, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, குருநாகல், நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வலயங்களில் வசிக்கும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறும் தொடர்ந்து மழை வீழ்ச்சி மற்றும் மண்சரிவுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இடர்அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் அதிக மழை வீழ்ச்சி இடம்பெற்ற காலி மாவட்டத்தில் பத்தேகம, இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுளை, இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகலை, கலவானை மற்றும் கிரியெல்ல, குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல, மாவத்தகம, கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹூபிட்டிய, வரக்காப்பொல, ரம்புக்கணை கலிகமுவ, நுவரெலியா மாவட்டத்தில் அம்பன்கஹகோரள பிரதேச செயலாளர் பிரிவு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி மண்சரிவு அபாய பிரதேசங்களில் வாழும் மக்கள் தொடர்ந்து மழை பெய்யுமானால் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இடர் நிலை ஏற்பட்டால் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு 10 மாவட்டங்களுக்கும் முப்படையினரை ஈடுபடுத்தியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை, காலி, மாத்தறை, குருநாகல், இரத்தினபுரி, நுவரெலியா மற்றும்
கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டங்களுக்காக விசேட நடவடிக்கைகைள முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment