Saturday, May 23, 2020

போதிய விளக்கமின்றி ஆயுதபோராட்டத்தை ஏற்றுக்கொண்டோம்.. அடித்தார் டக்ளஸ் அந்தர் பல்டி!

இலங்கை மக்களின் வாழ்வினைக் காவுகொண்ட ஆயத்போராட்டமானது நியாமானதா? என்ற கேள்விக்கு விடைதேட தமிழ் மக்கள் முற்பட்டுள்ளனர். விடுதலைப்பு புலிகளின் ஆயுதவன்முறைகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்த கருத்தை தொடர்ந்து இத்தேடல் இடம்பெற்றுவருகின்றது.

தேர்தல் ஒன்றை மக்கள் எதிர்நோக்கி நிற்கும் இச்சூழ்நிலையில் புலிகளின் முதுகில் பயணம் செய்து வாக்கு வசூலிக்கும் அரசியல்வாதிகள், சுமந்திரன் 'புலிகளின் வன்முறைகளை' நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்த கருத்தை 'ஆயுதப்போராட்டத்தை' நான் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்தாக திரிவுபடுத்தி சுமந்திரனை கண்டிப்பதன் ஊடாக தங்களை தேச பக்கதர்களாக முன்நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் யுத்த வெற்றி தொடர்பாக பிரதமர் மஹிந்த இராஜபக்ச கருத்து தெரிவிக்கும்போது, புலிகள் தொடர்பில் பேசிய விடயங்கள் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, 'எங்களுக்கு முன்பிருந்தவர்கள் ஜனநாயக வழிமுறைப் போராட்டங்கள் அல்லது ஜனநாயக அணுகுமுறைகளுக்கூடாக தீர்வுகாண முடியவில்லை என்று கூறியதை நம்பியதால் நாங்கள் ஆயுதப்போராட்டத்திற்கு நிற்பந்திக்கப்பட்டுவிட்டோம்' என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்களில் ஒன்றான ஈபிஆர்எல்எப் எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் இராணுவத் தளபதியாக செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தா, தமது முன்னோர்கள் ஜனநாயக வழிமுறைகள் தீர்வுகளை தரவில்லை என்று கூறியதை நம்பியதாலேயே தாங்கள் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்ததாக கூறுகின்றார். அதன் பிரகாரம் தங்களது முன்னோரால் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் ஆயுதப்போராட்டத்திற்கான தேவை ஒன்று இருக்கவில்லை என்றும் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தினை எடுத்துக்கொள்ள முடிகின்றது.

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் மெய்பொருள் காண்பதறிவு என்ற திருக்குறளுக்கமைய , ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்கள் ஆயுதப்போராட்டம் ஒன்றுக்கான தேவை உள்ளதாக என்பதை உறுதி செய்தபின்னர் ஆயுதங்களை கையிலெடுத்திருந்தால், தமிழ் மக்கள் இன்று சந்தித்துள்ள அழிவுகளையும் தவிர்த்திருக்கலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com