ஜனாதிபதி கோத்தாபய தொடர்பில் மக்கள் கவலையுடன் உள்ளனர்! - நலின் பண்டார
சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது கோத்தாபய ராஜபக்ஷ அவர்களை வெற்றிபெறச் செய்வதற்காக வாக்களித்த அனைவரும் இன்று பெரும் குழப்ப நிலையில் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கோத்தாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்களித்த இராணுவத்தினர் உட்பட சகல தரப்பினரும் இன்று தங்களது முட்டாள் நிலையை நினைத்து கவலைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று இராணுவத்தினருக்குச் சரிவர உணவுகூடக் கிடைப்பதில்லை. அவர்களுக்கு மரியாதை இல்லை. இராணுவத்தினருக்கு உறங்குவதற்கு கட்டில்கள் இல்லை. அவர்களுடைய கட்டில்கள் தனிமைப்படுத்தலுக்காக வழங்கப்பட்டுள்ளன. 30 - 40 பேர் கொண்டவர்களுக்கும் ஒரு மலசல கூடமே உள்ளது. அவர்களுக்கு விடுமுறை கூட இல்லை. அதனால் அவர்கள் மிகவும் கவலையுடன் உள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment