Saturday, May 2, 2020

வெசாக் வரை விழிப்புடன் செயற்பட வேண்டும் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

வெசாக் பண்டிகைக் காலம் வரை விழிப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், சில வரையறைகளுடன் மக்கள் தங்களின் நாளாந்த செயற்பாடுகளை குறிப்பிட்ட காலம் முன்னெடுக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் 4ஆம் திகதி நாட்டை வழமைக்கு கொண்டுவருவது தொடர்பில் எதனையும் கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேல் மாகாணத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும், கொரோனா பரவல் நூறு வீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளை 3,000 வரை அதிகரிப்பதற்கான இயலுமை காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் 1397 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் எந்த குழுவினருக்கு பி.சி.ஆர் சோதனை மேற்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்பில் தாம் திருப்தியடைதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.


.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com