Monday, May 25, 2020

கொரோனாவிலிருந்து பாதுகாப்புப் பெற தொடர்ந்தும் கவனமாக இருக்க வேண்டும்ண்டும்!

ஊரங்குடச் சட்டம் நாளை முதல் தளர்த்தப்பட்டாலும்கூட, இதுவரை கடைப்பிடித்த சுகாதார அறிவுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைக்கு கடற்படையைச் சேர்ந்த நோயாளிகளையும் வெளிநாட்டு நேயாளிகள் தவிர வேறு எந்தவொரு நோயாளியும் இனங்காணப்படவில்லை. கொவிட் 19 என்ற இந்த ஆட்கொல்லி நோய் சர்வதேசமெங்கும் நாளுக்கு நாள் கூடிய வண்ணமே உள்ளது. வெளியிலிருந்து இந்த நோய் தாக்குதலுக்கான நிறையவே சந்தர்ப்பங்கள் உள்ளன.

அதனால் நாங்கள் தெரிவிக்கின்ற முக்கியமான விடயங்களிலும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனக் கூறிக்கொள்கின்றோம்.

குறித்த இந்த நோயை முற்றுமுழுதாக ஒழிக்க வேண்டும் என்றால் குறைந்தளவு இரண்டு வருடங்களேனும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சமூக இடைவெளி, முகமூடி அணிதல், கைகளை நன்கு கழுவுதல் போன்ற விடயங்களில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். நான் புதிதாக பல அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளோம். அவற்றை எங்களது இணையத்தளத்தில் காணலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com