Saturday, May 23, 2020

எனது அவசர முடிவினால் ஓர் உயிர் பலிபோயுள்ளது.... என்னை மன்னித்துவிடுங்கள்! - நீரில் பாய்ந்த யுவதி

தலவாக்கலையில் தற்கொலைக்காக முயற்சித்த பெண்ணைப் பார்ப்பதற்காக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவன் பிரனாந்து இன்று வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண் பின்வருமாறு கூறியுள்ளார்.

'எனது தனிப்பட்ட விடயம் ஒன்றிற்காகவே நான் இந்த திடீர் முடிவினை எடுத்தேன். அதனால் ஓர் உயிர் பலி போயுள்ளது. அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். நான் வைத்தியசாலையிலிருந்து போனவுடனேயே அந்தக் குடும்பத்தைப் பார்க்கச் செல்வேன்.

தண்ணீரில் நான் அவரின் கையைப் பற்றிக்கொண்டேன். அதன்பிறகு நாங்கள் இருவரும் நீருக்குள் அமிழ்ந்தோம். நான் தண்ணீரின் மேலாக மிதந்தேன். அவர் வெளியில் வரவில்லை. யாரேனும் ஒருவர் என்னை ரியுப்பில் போட்டது மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அவர் யார் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். என்னைக் காப்பாற்றியிருப்பவர் தலவாக்கலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியே. எல்லோருக்கும் எனது நன்றி'

தொடர்புடைய காணொளிகள்....



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com