Tuesday, May 26, 2020

யாழிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான பேரூந்து சேவைகள் ஆரம்பம்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையினர் பஸ் சேவைகள் அக்கரைப்பற்று, கண்டி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கான பஸ் சேவையை ஆரம்பித்துள்ளனர்.

இன்று அதிகாலையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்புக்கான சேவை நீர்கொழும்பு வரைக்கும் இடம்பெறுவதாக யாழ் மத்திய பேருந்து நிலைய பொறுப்பதிகாரி தனராஜ் தெரிவித்தார்.

இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த சேவையானது ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பஸ் சேவை இடம்பெறவுள்ளதாகவும் எனினும் இது காலப்போக்கில் அதிகரிப்பதற்குரிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் எனினும் பஸ் சேவையினை பெற்றுக் கொள்ளும் பொதுமக்கள் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தங்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் கொரானா தொற்றுநோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைபட்டு வந்த நிலையில் இன்றைய தினம் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் தளர்த்ப்பட்டுள்ள நிலையில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து பஸ் சேவைகளையும் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொதுமக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் முகமாக உள்ளூர் சேவைகள் அதிகரிக்கப்பட வுள்ளன.

இன்றைய தினம் தனியார் போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றது எனினும் வெளி மாவட்டங்களுக்கான தனியார் பஸ்சேவைகள் ஆரம்பிக்கப்படவில்லை அதாவது வடக்கு மாகாணத்துக்குட்பட்ட மாவட்டங்களுக்கு மட்டுமே தனியார் போக்குவரத்து சேவை இன்று இடம்பெற்று வருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com