அலரி மாளிகையில் நாளை கூடவுள்ள கூட்டத்தைப் பகிஷ்கரிக்கிறது ஐதேக!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்புவிடுத்துள்ள பேச்சுவார்த்தையை நாளை திங்கட்கிழமை (04) புறக்கணிக்க ஐக்கிய தேசிய கட்சி முடிவு செய்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக பிரிவு அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கு அலரி மாளிகைக்கு வருகைதருமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமரின் வேண்டுகோளுக்கு தற்போது செவிசாய்க்க மறுப்புத் தெரிவித்துள்ள போதும், முன்னர் கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சி முன்பு முடிவு செய்ததாகவே ஐக்கிய தேசிய கட்சி கூறுகிறது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் அனைவரும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதால் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது போகும் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆயினும், கொவிட் - 19 எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஆதரவு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment