Friday, May 1, 2020

காகிதத் தொழிற்சாலையிலும் கைவைத்திருக்கிறாராம் ரிஷாதார்!

தான் கைது செய்யப்படுவதைத் தடுக்க நீதிமன்ற உத்தரவு கோரியுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தொழில்துறை அமைச்சராக இருந்தபோது 350 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையில் உள்ள ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கியுள்ளதாகவும், குறித்த நிலப்பகுதியை வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

காகிதத் தொழிற்சாலையில் பயன்படுத்திய மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை விற்க ரிஷாத் பதியுதீன் அமைச்சரவை ஒப்புதல் எடுத்துள்ளார். 1996 ஆண்டு காலப்பகுதியில் நாட்டுக்குத் தேவையான காகிதங்களில் 50% க்கும் அதிகமாக காகிதங்களை உற்பத்தி செய்ய வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை பங்களிப்புச் செய்துள்ளது.

வாழைச்சேனை காகித தொழிற்சாலையை புதுப்பித்து அதன் காகித உற்பத்தியை மீண்டும் தொடங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். காகிதத்தை இறக்குமதி செய்வதில் ஆண்டுதோறும் 99,000 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயத்தை கணிசமான அளவு சேமிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com