தோட்ட தொழிலாளர்களுக்கு 5000 வழங்குவதில் பிரச்சினையா? ஐயா தெரியாது என்கின்றார் பவித்திரா
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உறுதி அளித்துள்ளார்.
நேற்று நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில், கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கும் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்னாயக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
0 comments :
Post a Comment