நாளை முதல் மீண்டும் ரூபா 5000 கொடுப்பனவு!
கொரோனவின் காரணமாக மிகவும் கஷ்ட நிலைக்கு உள்ளாகியுள்ள குழுவினருக்கு ரூபா 5000 கொடுப்பனவை மே மாதத்திற்கும் வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுதொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மே மாதக் கொடுப்பனவு நாளை திங்கட்கிழமை (4) ஆரம்பமாவதுடன், வெசாக் பெளர்ணமி தினத்திற்கு முன்னர் அந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதியோர், வலது குறைந்தோர், சிறுநீரக நோயினால் பாதிப்புக்குள்ளானோர் போன்றோருக்கு மார்ச் மாதம் முதல் ஒருவருக்கு 5000 வீதம் கொடுப்பனவினை வழங்க ஜனாதிபதி தீர்மானித்திருக்கின்றார். ஆரம்பமாகப் பதியப்பட்டிருந்தோருக்கும் பின்னர் பதியப்பட்டோருக்கும் பாகுபாடின்றி இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும்.
மே மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவும் நாளை முதல் வழங்கப்படவுள்ளதுடன், பெளர்ணமி தினத்திற்கு முன்னர் அனைத்துக் கொடுப்பனவுகளும் கொடுக்கப்படவுள்ளன எனவும் தெரியவருகின்றது.

0 comments :
Post a Comment