இலங்கையில் கொரேனா தொற்றாளர்களில் 350 பேர் கடற்படையினரே!
தற்போது வெளியாகியுள்ள தரவுகளின்படி கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 350 பேர் கடற்படையைச் சேர்ந்தோரும் அவர்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணியோர் எனவும் தெரியவருவதுடன், இராணுவ வீரர்கள் பத்துப் பேரும் வான்படையைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்கியுள்ளனர் என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று இனங்காணப்பட்ட நோயாளர்களில் 33 பேரில் 31 பேர் கடற்படையைச் சேர்ந்தோர் என சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
ஏனையோர் கடற்படையினருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் என்பதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் எனவும் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார். மேலும் கொவிட் - 19 தொற்றுக்குள்ளான ஆறுபேர் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது இலங்கையில் பதிவாகியுள்ள கொரோன தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 755 வரை உயர்ந்துள்ளது. நோயாளர்கள் 194 பேர் தற்போது பூரண சுகமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளதுடன் 553 பேர் வைத்தியசாலைகளில் அநுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0 comments :
Post a Comment