செல்வம் அடைக்கலநாதன் உட்பட 22 முன்னாள் மந்திரிகளுக்கு எதிராக வழக்கு. பட்டியல் இதோ!
அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பெயரில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உட்பட 22 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படுகின்றது.
உத்தியோகபூர்வ அரச இல்லங்களை மீள கையளிக்கவில்லை என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இந்த வழக்கினை தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் கீழ்காணப்படுவோருக்கு எதிராக வழக்கு தொடரப்படுகின்றது:
ரவூவ் ஹக்கீம், சந்திராணி பண்டார, எச் எம் குணசேகர, தினேஷ் கங்கந்த, லக்ஷ்மன் செனவிரத்ன, அமீர் அலி, ஜே.டி அலவதுவல, அசோக்க அபேசிங்க, எம்.ஹரீஸ், சம்பிக்க பிரேமதாச, பைசல் காசிம், செல்வம் அடைக்கலநாதன், ரவீந்திர சமரவீர, ஹலீம்,சந்திம வீரக்கோடி, பைசர் முஸ்தபா, துளிப் விஜசேகர, டி.பி ஏக்கநாயக்க, ஜகத் புஸ்பகுமார, ஹிஸ்புல்லாஹ்
0 comments :
Post a Comment