Thursday, May 14, 2020

ஊடக அடையாள அட்டைகளின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கென வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் தணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவௌ அறிவித்தள்ளார்

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை 2020 ஆம் ஆண்டுக்காக விண்ணப்பித்த ஊடகவியலாளர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நடைமுறைப் பிரச்சினையின் காரணமாக இதுவரையில் அடையாள அட்டை கிடைக்கப்பெறாத ஊடகவியலாளர்களுக்கு தமது கடமைகளை தடையின்றி மேற்கொள்வதற்காக தொடர்ந்தும் வசதிகளை செய்துதவுமாறு தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை கௌரவ அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்களினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக 2020 ஆம் ஆண்டுக்காக வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை இதுவரை கிடைக்கவில்லையாயின் 2019 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் 2020 ஜுலை மாதம் 15ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதை அறியத்தருகிறோம் என்று அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவௌ தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com