Thursday, May 7, 2020

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு ரூபா 891 மில்லியனாக அதிகரிப்பு

செலான் வங்கி 2.5 மில்லியன் ரூபாவையும், லங்கா இந்தியன் ஒயில் கம்பனி 05 மில்லியன் ரூபாவையும், திரு. கே.டீ.யு. குணரத்ன ஒரு மில்லியன் ரூபாவையும் மற்றும் திரு. ஏ.பி.பீ சேனகம இரண்டு லட்சம் ரூபாவையும் கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்ட அன்பளிப்புகளை பிரதமர் அவர்கள் நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்தார்.

நிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நிவ் சவுத் வேல்ஸில் உள்ள பேராதனை பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் நேரடியாக வைப்புச் செய்துள்ள 1.5 மில்லியன் ரூபாவையும் சேர்த்து கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 891 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார,சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479, 0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com