Sunday, May 24, 2020

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 1085 : குணமடைந்தோர் 660 என அறிவிப்பு!

இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 85 என்பதுடன், இந்த நோயாளரகளில் 660 பேர் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

நேற்றைய தினத்தில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 17 பதிய நோயாளர்கள்; பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

இந்த நோயாளர்களில் 15 பேர் கடற்படை அங்கத்தவர்கள். ஆவதுடன் இவர்களில் 10 பேர் கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திலும் ஜவர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திலும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள்.

ஏனைய இரு நோயாள்களும் டுபாயில் இருந்து வந்த பின்னர் கிராகம தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள்.

இதேபோன்று இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளர்களில் 416 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை ஆயிரத்து 970 ஆவதுடன் இத்தினத்தில் அடையாளங்காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 13 ஆகும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com