இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1023 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று மாலை 31 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் 28 பேர் ஒலுவில் தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த கடற்படை உறுப்பினர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
தொற்றுக்குள்ளான 445 பேர் வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதற்கமைய நாட்டில் கொரோனா நோயாளர்கள் 569 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
0 comments :
Post a Comment