Friday, April 17, 2020

CORONA வைரசு எங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டதே அல்ல... ! சீனா மறுப்பு

ஆட்கொல்லி வைரசான கோவிட் - 19 இன்று உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கின்றது. சர்வதேசமெங்கும் அதனது ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. இந்த வைரசு தொடர்பில் ஆய்வாளர்கள் பலரும் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அது உருவாக்கப்பட்டது என்றும் இயற்கையாக உருவாகியது என்றும் குறிப்பிடுகின்றனர். அதற்காக சில நாடுகளைக் குறைகூறிக் கொண்டும் இருக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில், கொவிட் - 19 வைரசு தங்களது நாட்டு மருத்துவ இரசாயனகூடங்களில் உற்பத்தி செய்யப்படவில்லை என சீனா தௌிவுறுத்தியுள்ளது.

குறித்த வைரசானது இரசாயனகூடங்களில்உற்பத்தியாக்கப்பட்டது அல்ல என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோயஸ் எடனம் நேற்று முன்தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது கூறினார் என சீனா மேலும் தௌிவுறுத்தியுள்ளது.

தொற்று நோயானது மனித இனத்தின் பரம எதிரி என்றும் அதனை சூட்சும் வழிகளைக் கையாண்டுதான் வேரோடு அழிக்கலாம் எனவும் சீனா குறிப்பிட்டுள்ளது. அதற்கேற்ப, நாடுகளுக்கிடையே புரிந்துணர்வினை மேற்கொண்டு தனது நாடு கொரோனாவை அழிப்பதற்காக கைகொடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது சீனா.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com