பெண் உரிமைகளை பேரழிவுக்குட்படுத்துகின்றது கொரோணா தொற்று! ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம்
கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள பெண்களின் உரிமைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொவிட் – 19 பரவலை தடுப்பதற்காக கடைப்பிடக்கப்படும் ஊரடங்குச் சட்டங்களும், நாடுகளை முடக்கும் உத்தரவுகளும் குடும்பக் கட்டுப்பாடடை குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படலாம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலைமை சிறுவர் திருமணம் மற்றும் பெண் பிறப்புறுப்பு சிதைவு ஆகியவற்றுக்கு வழி வகுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஆகவே இதனை ‘ஒரு பேரழிவு நிலைமை’ என கருத முடியும் என ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) நிறைவேற்று பணிப்பாளர் நடாலியா கனெம் (Natalia Kanem) தெரிவித்துள்ளார்.
‘முரண்பாட்டு நிலைமைகளின் போது பெண்கள் பாதிக்கப்படுவதை விடவும் தற்போது கொவிட் – 19 தொற்றால் பாதிப்புக்குள்ளாவது அதிகம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக பெண்கள் திட்டமிடப்படாத கர்ப்பம், குடும்பநல உத்தியோகத்தர் இல்லாமல் நிகழும் குழந்தை பிரசவம் அத்துடன் குழந்தை திருமணம் போன்ற விடயங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஆபத்து உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் பெரும்பாலான உலக நாடுகள் தத்தமது நாடுகளை மூடியுள்ளதால் அது குடும்பங்கள் மீதான சமூக மற்றும் பொருளாதார அழுத்தங்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது.
அதனால் இந்த நிலைமையை ‘உள்நாட்டு வன்முறையில் பயங்கரமான உலகளாவிய எழுச்சி’ என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தற்போதைய சூழலில், எதிர்வரும் ஆறு மாதங்களில் 30 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் கொவிட் – 19 தொற்றால் அதிக வன்முறைகளுக்கு உள்ளாவது நிச்சயம் எனவும் அந்த அமைப்பு மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment