Saturday, April 18, 2020

இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அரசு வழிவகுக்கும்!

இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு திருத்தப்பட்டு, அடுத்த வாரம் 21 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்று அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் காரணமாக தற்போது அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக உள்ள ஆறு மாவட்டங்களில் நான்கைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக நியமிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு இந்த மாத இறுதி வரை நீட்டிக்கப்படும். இருப்பினும், உயர் இடர் மாவட்டங்களாக உள்ள கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களும் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும். மேல் மாகாணத்திற்கான ஊரடங்கு உத்தரவு மார்ச் 20 அன்று விதிக்கப்பட்டது, ஒரே ஒரு தளர்வுக்குப் பிறகு மீண்டும் விதிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவிவருவதைத் தொடர்ந்து புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மூன்று மாவட்டங்கள் அரசாங்கத்தால் அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

இன்னும் 7 மாவட்டங்கள் இடர் வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் ஒருவருக்குக்கூட தொற்றாத வலயங்களாக 12 மாவட்டங்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களில் ஆபத்தற்ற வலயங்களாக உள்ளதாக சுகாதர அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு ஏற்ப, அதனைக் கருத்திற்கொண்டு அந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்ைகயை நடாத்திச் செல்லவே இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா இடர்வலயங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்கள் ஆறும் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டமானது, எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு அமுலில் இருக்கும். அந்த மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் பின்னர் அறிவிக்கும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com