மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்
எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் சாதாரண சேவை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அலஹகோன் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபங்களுக்கும் அமையவே திணைக்களத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதனபடிப்படையில், பொதுமக்களின் வருகையும் மட்டுப்படுத்தப்படவுள்ளது.
அலுவலகங்களுக்கு வருகைதருவதற்கு முன்னர், பொதுமக்கள் தொலைபேசியூடாக தமக்கான நேரத்தை ஒதுக்க வேண்டும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறு நேரத்தை ஒதுக்காதவர்களுக்கு தமது அலுலகத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், திணைக்களத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment