இலங்கையில் கொரோனா வைரசினால் மூன்றாவது நபர் மரணம்!
கொவிட் - 19 வைரசுத் தொற்றுக்குள்ளான இன்னுமொருவர் மரணமடைந்துள்ளார். அங்கொட ஐ.ரீ.எச்சில் சிகிச்சை பெற்று வந்தநிலையிலேயே நேற்றிரவு குறித்த நபர் மரணமடைந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மருதானையைச் சேர்ந்த 72 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். தற்போது இந்த மரணத்துடன் சேர்த்து இதுவரை கொரானோ வைரசுத் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாகும். நேற்றைய தினம் கொவிட் - 19 வைரசுத் தொற்றுக்குள்ளாகிய மூவர் நேற்று மருதானை, குருணாகல், யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலிருந்து இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சுத் தெரிவித்தது.

0 comments :
Post a Comment