ஸஹ்ரான் தங்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியதாக ஒப்புக்கொண்ட மாணவன் சொல்வதைக் கேளுங்கள்...!
காரைதீவு - வனாதவில் அறபுக் கலாசாலையில் கல்வி கற்ற மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதற்கான தகவல்கள் கிடைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் வேட்டைகளை ஆரம்பித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தங்கியிருக்கின்ற 14 வயதுடைய மாணவர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காரைதீவு அறபுக் கலாசாலை 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது 2018 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதிவரை நடைபெற்றுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள அநாதைச் சிறுவர்கள் 30 - 40 பேர் இந்த அறபுக் கலாசாலையில் கல்வி கற்றுவந்துள்ளனர். அந்தக் கலாசாலையில் க.பொ.த. சா.த வரை பாடசாலைக் கல்வியும் வழங்கப்பட்டு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அந்த அறபுக் கலாசாலையை நடாத்தி வந்தவர் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரான் எனத் தெரியவந்துள்ளதுடன், அங்கு கற்ற மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன் குறிபார்த்துச் சுடக் கற்றுத்தந்ததாகவும் குறித்த மாணவன் தெரிவித்து தன்னை மன்னிக்குமாறு கோரியதாகவும் தெரியவருகின்றது.
குறித்த மாணவன் உட்பட சந்தேகத்திற்கிடமான மாணவர்கள் சிலரை குறித்த அறபுக் கலாசாலைக்கு அழைத்து வருவதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தனர். என்றாலும் குறித்த மாணவன் தங்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கிய இடத்தைச் சரிவரக் காட்டுவதற்கு முடியாது போயுள்ளான். அதற்குக் காரணம் அங்கு கட்டட நிர்மாணப் பணிகள் பல இடம்பெற்றுள்ளமையே எனவும் தெரியவருகின்றது.

0 comments :
Post a Comment